உள்ளூர் செய்திகள்
பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் ரூ.100 முதல் 1 லட்சம் வரை அபராதம்- காஞ்சிபுரம் கலெக்டர் எச்சரிக்கை
தமிழக அரசால் தடை செய்யப்பட்டு உள்ள ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை நாளை முதல் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி வீசப்படும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள், வணிக வளாகங்கள், துணி கடைகள், மருந்து கடைகள், பல்பொருள் அங்காடிகளில் பயன்படுத்துவதை முற்றிலும் தடை செய்து, அதற்கு மாற்று பொருட்களை பயன்படுத்த ஒருவார காலத்திற்குள் மாறும்படி 21.3.2022 அன்று செய்தி வெளியிடப்பட்டது.
மேலும் இதை தீவிரமாக கண்காணிக்க மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் தனித்தனியே குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுக்கள் பகுதி வாரியாக திடீர் ஆய்வுகள் மேற்கொள்வார்கள். அவ்வாறு அரசால் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தல், சேமித்து வைத்தல், போக்குவரத்து செய்தல், விநியோகித்தல், விற்பனை செய்தல் மற்றும் உபயோகப்படுத்துதல் போன்றவை கண்டறியப்பட்டால் சிறிய வணிக விற்பனையாளர்களுக்கு முதல் தடவை ரூ.100, 2-வது தடவை ரூ.200 3-வது தடவை ரூ.300 அபராதம் விதிக்கப்படும்.
இதேபோல் மளிகை கடைகள், மருந்து கடைகளுக்கு ரூ.1000 முதல் ரூ.5 ஆயிரம் வரையும், வணிக வளாகங்கள், துணிக் கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரையும், பயன்படுத்தப்பட்ட மற்றும் தூக்கி வீசப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சேமித்தல், வழங்குதல், கொண்டு செல்லுதல், விற்பனை செய்தல் மற்றும் பகிர்ந்தளித்தால் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரையும் அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இதேபோல் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டு உள்ள மற்றொரு அறிவிப்பில், தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என்கிற உறுதி மொழியை 1.4.2022 அன்று பொதுமக்கள், மாணவர்கள், வணிகர்கள், அரசு ஊழியர்கள் ஆகிய அனைவரும் ஏற்க வேண்டும்.
சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத இயற்கையில் கிடைக்கும் வாழையிலை, பாக்குமர இலை, காகித சுருள், கண்ணாடி உலோகத்தால் ஆன குவளைகள், காகித உறிஞ்சு குழாய்கள், காகித துணி கொடிகள், உணவு தேக்கரண்டிகள், அலுமினியத்தாள், தாமரை இலை, மூங்கில் மரம், மண் பொருட்கள், துணி, காகிதம், சணல் பைகள், பீங்கான் பாத்திரங்கள், மண் குவளைகளை பயன்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.