உள்ளூர் செய்திகள்
ஓசூர் மாநகராட்சி 1,2-வது மண்டல தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது 3,4-வது மண்டலத்தில் அ.தி.மு.க. வெற்றி
ஓசூர் மாநகராட்சியில் 1,2-வது மண்டலத்தில் தி.மு.க.வும், 3,4-வது மண்டலத்தில் அ.தி.மு.க. வும் வெற்றி பெற்றுள்ளனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் 4 மண்டலங்கள் உள்ளன.
இந்த நிலையில் இன்று காலை மண்டல தலைவர் பதவிகளுக்கான தேர்தல் நடந்தது. பிற்பகலில் நிலைக்குழு தலைவர்கள் தேர்தல் நடக்கிறது.
1, 2-வது மண்டலத்தில் தி.மு.க. வெற்றி
இன்று காலை நடந்த மாநகராட்சியின் 1&வது மண்டல தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஆர்.ரவி 7 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. கவுன்சிலர் ரஜினிகாந்த் 4 வாக்குகள் பெற்றிருந்தார்.
இதேபோல் 2-வது மண்டல தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பில் போட்டியிட்ட காந்திமதி கண்ணன், போட்டியின்றி வெற்றி பெற்றார்.
அ.தி.மு.க. வெற்றி
மாநகராட்சியின் 3&வது மண்டல தலைவர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட புருசோத்தம ரெட்டி, 7 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. கவுன்சிலர் எஸ்.மஞ்சம்மா , 3 வாக்குகள் பெற்றிருந்தார்.
4-வது மண்டல தலைவர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஜெயபிரகாஷ் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. கவுன்சிலர் ஆர்.சென்னிரப்பா, 3 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.