உள்ளூர் செய்திகள்
கொள்ளை

பள்ளிக்கரணையில் மளிகை கடை பூட்டை உடைத்து கொள்ளை

Published On 2022-03-30 14:35 IST   |   Update On 2022-03-30 14:35:00 IST
பள்ளிக்கரணையில் மளிகை கடை பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளிக்கரணை:

பள்ளிக்கரணை, வி.ஜி.பி. சாந்தி நகர், 3-வது தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் பள்ளிகரணை லேபர் காலனி முதல் தெருவில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

நேற்று இரவு அவர் வியாபாரம் முடிந்ததும் வழக்கம் போல் கடையை பூட்டிச்சென்றார். இந்த நிலையில் இன்று காலை வெங்கடேசன் கடையை திறக்க வந்த போது ‌ஷட்டர் பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்த போது கடைக்குள் வைத்தி ருந்த ரூ.2 லட்சத்து 74 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

இது குறித்து பள்ளிக்கரணை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

அங்குள்ள கண்காணிப்பு காமிராவில் 2 மர்ம வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வருவதும், அவர்கள் கடைக்குள் நுழைந்து கொள்ளையில் ஈடுபடுவதும் பதிவாகி உள்ளது.

இதனை வைத்து கொள்ளையர்களை பிடிக்க தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

Similar News