உள்ளூர் செய்திகள்
முத்தியால்பேட்டை தொகுதி அ.தி.மு.க. சார்பில் மோர் பந்தல் திறக்கப்பட்டது.

அ.தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தல்

Published On 2022-03-30 14:00 IST   |   Update On 2022-03-30 14:00:00 IST
முத்தியால்பேட்டை அ.தி.மு.க. சார்பில் காந்தி வீதியில் நீர்மோர் பந்தலை வையாபுரி மணிகண்டன் திறந்து வைத்தார்.
புதுச்சேரி:

முத்தியால்பேட்டை   தொகுதி அ.தி.மு.க. சார்பில்  காந்திவீதியில் உள்ள போலீஸ் நிலையம் அருகே நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. 

புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. தேர்தல்  பிரிவு செயலாளர் வையாபுரி மணிகண்டன் நீர் மோர் பந்தலை திறந்து வைத்து குளிர்ந்த நீர், மோர், இளநீர், பதநீர் போன்ற பானங்களையும், வெள்ளரி, தர்பூசணி, கிர்ணி போன்ற பழங்களையும் பொதுமக்களுக்கு  வழங்கினார். 

நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் கஜேந்திரன், பழனிசாமி, ராஜாங்கம், உதயசூரியன், செல்வம், மோகன், முருகேசன், விஸ்வநாதன், அந்துவான், கண்ணன், கார்த்திக், சிவா, சத்தியா, ராஜேஷ், மன்னாகட்டி, முனியாண்டி, நாகராஜ், ராமலிங்கம், பிரபா, நடராஜ், தனசேகர்,  ராதா, தனலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News