உள்ளூர் செய்திகள்
வானில் வட்டமிட்ட வவ்வால்களை படத்தில் காணலாம்.

குடியிருப்பு பகுதிக்குள் கூட்டம் கூட்டமாக சுற்றி வந்த வவ்வால்கள்

Published On 2022-03-29 15:51 IST   |   Update On 2022-03-29 15:51:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே குடியிருப்பு பகுதிக்குள் கூட்டம் கூட்டமாக சுற்றி வந்த வவ்வால்கள்
வேப்பனப்பள்ளி, 

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள லட்சுமிபுரம் தெருவில் நேற்று மாலை ஆயிரத்துக்கும் மேற்பட்ட வவ்வால்கள்  கூட்டம் கூட்டமாக சுற்றி வந்தால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

லட்சுமிபுரம் கிராமத்தின் அருகே உள்ள ஒரு பெரிய புளிய மரத்தில் இரவு நேரம் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வவ்வால்கள் கூடியிருப்பது வழக்கம். நேற்றும் வழக்கம்போல் குடியிருந்த வவ்வால்கள் திடீரென்று மரத்தில் இருந்து வெளியேறி ஆயிரக்கணக்கான வவ்வால்களுடன் மற்றும் காகங்களும் சேர்ந்து வானில் வட்டமிட்டது. 

இதனால் லட்சுமிபுரத்தில் இருந்து வட்டார வளர்ச்சி அலுவலகம் வரை கூட்டம் கூட்டமாக 1000&க்கும் மேற்பட்ட வவ்வால்கள் குடியிருப்பு பகுதி மேல் வந்து வட்டமிட்டதால் அப்பகுதியில் பொதுமக்கள் சிறுவர்கள், வாகன ஓட்டிகள் வியப்புடன் நின்று பார்த்தனர். 

சற்று நேரம் அந்த பகுதியில் சுற்றித்திரிந்த வௌவால்கள் கூட்டம் வட்டமீட்டதால் பகுதியில் கருப்பு மேகம் போல் காணப்பட்டது. 

இதையடுத்து அரைமணி நேரத்திற்கு பிறகு வவ்வால் கூட்டம்  கலைந்து மீண்டும் மரத்திற்க்கே சென்றுவிட்டது. குடியிருப்பு பகுதிக்கு மேலே சற்று நேரம் 1000&த்திற்கும் மேற்ப்ட்ட வவ்வால்கள் சூழ்ந்து கொண்டதால்  இப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

Similar News