உள்ளூர் செய்திகள்
தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி 2 விவசாயிகள் பலி
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி 2 விவசாயிகள் பலியாகினர்.
வேப்பனப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள கங்கமடுகு கிரமாத்தை சேர்ந்தவர் அம்சகிரி (வயது45), ராஜன் (30). இவர்கள் இருவரும் அதே பகுதியில் விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மாலை இவர்கள் இருவரும் மாணவரனபள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக சாலையின் தடுப்பு சுவரில் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டதில் அம்சகிரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் படுகாயம் அடைந்த ராஜனை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்த விபத்து குறித்து வேப்பனப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு விசாரனை நடத்தி வருகின்றனர்.
சாலை தடுப்பு சுவரில் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.