உள்ளூர் செய்திகள்
பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.

மகா மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

Published On 2022-03-29 07:58 GMT   |   Update On 2022-03-29 07:58 GMT
குத்தாலம் அருகே ஸ்ரீகண்டபுரம் மகா மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.
குத்தாலம்:

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே ஸ்ரீகண்டபுரம் கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 18-ம் தேதி பூச்சொரிதலுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று நேற்று தீமிதி திருவிழா நடைபெற்றது.

இதையொட்டி பக்தர்கள் அலகு காவடி, சக்தி கரகம் எடுத்து ஊர்வலமாக புறப்பட்டு கோயிலை வந்தடைந்தனர். கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாவிளக்கு தீபமிட்டு வழிபாடு செய்தனர்.

வாணவேடிக்கை நிகழ்ச்சி பொதுமக்களை உற்சாகப்படுத்தியது. நிகழ்ச்சியை கிராம நாட்டாண்மைகள் மற்றும் கிராமவாசிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.
Tags:    

Similar News