உள்ளூர் செய்திகள்
சீர்காழி விவேகானந்தா மகளிர் கல்லூரியில் நடந்த கருத்தரங்கம்.

மகளிர் கல்லூரியில் வணிகவியல் கருத்தரங்கம்

Published On 2022-03-29 13:26 IST   |   Update On 2022-03-29 13:26:00 IST
சீர்காழி விவேகானந்தா மகளிர் கல்லூரியில் வணிகவியல் கருத்தரங்கம் நடைபெற்றது.
சீர்காழி:

சீர்காழி விவேகானந்தா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் உயராய்வுத்துறை மற்றும் வணிகவியல் மேலாண்மைத்துறை சார்பாக வணிகம் மற்றும் வணிக நிலைத்தன்மையில் வளர்ந்து வரும் போக்குகள் பற்றிய ஒரு  நாள் கருத்தரங்கம் அண்மையில் நடந்தது.

கல்லூரி செயலர் கே.வி.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். இயக்குனர்கள் மருத்துவர் முத்துக்குமார், அனிதாஇராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் சுகந்தி வரவேற்றார்.சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வணிகவியல் துறை பேராசியரும், பல்கலைகழக மாணிய குழுவின் ஆராய்ச்சி விருது பெற்றவருமான முனைவர் ராமு சிறப்புவிருந்தினராக பங்கேற்று கருத்துரை வழங்கினார்.

அப்போது வணிகத்தில் வளர்ந்துவரும் மாற்றங்கள் குறித்தும் அதை எதிர்கொள்ளும் யுக்திகள் குறித்து விளக்கினார். இதில் விவேகானந்தா மகளிர் கல்லூரி, மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி, பொறையார் கல்லூரி, தருமபுரம் ஆதீனம் கல்லூரி, தரங்கம்பாடி அன்னை தெரசா கல்லூரி மாணவிகள் பங்கேற்று 30க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.

ஆய்வு கட்டுரைகளை ராமு ஆய்வு செய்து, மாணவிகளை ஊக்குவி, ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய புத்தகத்தை விழாவில் வெளியிட்டார். நிறைவில் பேராசிரியை புனிதவதி நன்றி கூறினார்.

Similar News