உள்ளூர் செய்திகள்
இயற்கை முறை பூச்சி விரட்டிகள் குறித்த செயல் விளக்கம் அளிக்கப்பட்ட போது எடுத்த படம்.

விவசாயிகளுக்கு இயற்கை முறை பூச்சி விரட்டிகள் செயல் விளக்கம்

Published On 2022-03-29 11:46 IST   |   Update On 2022-03-29 11:46:00 IST
கபிலர்மலை வட்டாரத்தில் விவசாயிகளுக்கு இயற்கை முறை பூச்சி விரட்டிகள் குறித்த செயல் விளக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை வட்டாரம், பாண்டமங்கலம் பகுதியில் கபிலர்மலை வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி தலைமையில் வேளாண் அனுபவ பயிற்சியில் ஈடுபடும் தனியார் வேளாண்மை அறிவியல் கல்லூரி மாணவர்களால் விவசாயிகளுக்கு இயற்கை முறை பூச்சி விரட்டி குறித்த விளக்கம் அளிக்கபப்ட்டது.

மேலும் பஞ்சகவ்யம், 3ஜி கரைசல் மற்றும் ஐந்துதலை கரைசல் ஆகியவை தயாரிப்பது குறித்தும் செய்து காண்பிக்கப்பட்டது. பின்னர் இயற்கை முறை பூச்சி விரட்டிகள் தயாரிக்கும் முறைகள் குறித்த துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டு விவசாயிகளுக்கு இதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Similar News