உள்ளூர் செய்திகள்
தேன்கனிக்கோட்டை பேட்டராயசுவாமி கோவிலில் தேர் கட்டும் பணிக்கு பால் கம்பம் நடும் விழா
தேன்கனிக்கோட்டை பேட்டராயசுவாமி கோவிலில் தேர் கட்டும் பணிக்கு பால் கம்பம் நடும் விழா நடந்தது.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பிரசித்திபெற்ற பேட்டராய சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் பிரம்மோற்சவ விழா கோலா கலமாக நடைபெறும். கொரோனா நோய் பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தேர் திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு திருவிழா வரும் ஏப்ரல் 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா ஏப்ரல் 13-ஆம் தேதி நடக்கிறது. திருவிழாவுக்கான தேர் கட்டும் பணிக்கு பால் கம்பம் நடும் விழா நடைபெற்றது.
முன்னதாக ஸ்ரீதேவி, பூதேவி சமேத பேட்டராய சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் செய்து பால்கம்பத்தை எடுத்து கொண்டு கோவிலை சுற்றி வலம் வந்து தேருக்கு பூஜைகள் செய்து புனிதநீர் தெளித்து வேத மந்திரங்கள் ஓதி மேளதாளங்கள் முழங்க பால் கம்பம் நட்டு பூஜைகள் செய்யப்பட்டது.