உள்ளூர் செய்திகள்
ஓசூர் வனக்கோட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி
ருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டத்தில் 2&வது கட்டமாக பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டத்தில் இரண்டாம் கட்டமாக காவிரி வடக்கு வன உயிரின சரணாலய பகுதிகளிலும், காவிரி சின்னாறு நீர்ப்பிடிப்பு பகுதிகள் உள்ள உரிகம் மற்றும் அஞ்செட்டி வனச் சரகங்களில் 16 பீட்களில் உள்ள காப்புக்காட்டிலும் பறவைகள் கணக் கெடுப்பு பணி, ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயினி தலைமையில் நேற்று நடந்தது.
இதில், 50-க்கும் மேற்பட்டவன அலுவலர்கள் வனப் பணியாளர்கள் மற்றும் 50 தன்னார்வலர்கள் கலந்து கொண்டு பணியில் ஈடுபட்டனர். இந்த பணியின் போது, தொலை நோக்கு கருவி, காமிரா உள்ளிட்ட கருவிகளை பயன் படுத்தி ஏசியன் பேரடைஸ், பிளை கேட்சர், மயில்கள், புதர் காடைகள், கள்ளிப்புறா, நீலப் பைங்கிளி, சின்னான் கருத்திடு, ஊதாதேன்சிட்டு உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட பறவை இனங்களை அடையாளம் கண்டு உரிய படிவத்தில் குறிப்பிடப் பட்டது.