உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

குவைத் ஓட்டல் அதிபரிடம் ரூ.1 கோடி மோசடி

Published On 2022-03-28 06:12 GMT   |   Update On 2022-03-28 06:12 GMT
குவைத் ஓட்டல் அதிபரிடம் ரூ.1 கோடி மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை :

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் கே.ராயவரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபாலன். இவர் குவைத்  மங்காப் பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இதில் இவரது நண்பர் அயூப்கான். இவர் மூலம் திருச்சி கே.கே.நகரைச் சேர்ந்த பீர்முகமது அறிமுகமானார்.

இந்நிலையில் பீர் முகமது விற்கு அவசரமாக பணம் தேவைப்பட்டதால் அயூப்கானிடம் கடன் பெற்று தருமாறு கேட்டார். இதனையடுத்து 2018ல் குவைத்தில் இருந்த ஜெயபாலனிடம் அயூப்கான் கூறினார். இதனை கேட்ட ஜெயபாலன், பணம் தருவதாக கூறினார். இதைதொடர்ந்து பீர்முகமது, மைத்துனர் ஹம்மாது, இர்சாத் அமது, இஸ்சியாத் அகமது (வயது 25) ஆகியோருடன் குவைத் சென்று பேசினார்.

கடன் தருவதாக கூறிய ஜெயபாலன் பல்வேறு முறைகளில் வங்கியில் ரூ.1 கோடி செலுத்தினார். வாங்கிய பணத்திற்கு வட்டி மற்றும் அசல் தொகை கூறியபடி கொடுக்கவில்லை. இதில் தன்னை மோசடி செய்ததாக திருச்சி மாநகர கமிஷனரிடம் ஜெயபாலன் புகார் அளித்தார்.

இதன் பேரில் அப்போதைய இன்ஸ்பெக்டர் நாஞ்சில்குமார் வழக்கு பதிந்தார். இதற்கிடையில் மாநகர கமிஷனராக பொறுப்பேற்ற கார்த்திகேயன் நிலுவையில் உள்ள குற்றப்பிரிவு வழக்குகளை விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தர விட்டார்.

இதன் பேரில் மீண்டும் விசாரணை நடத்திய மாநகர குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கோசலைராமன் தீவிர விசாரணை நடத்தி மோசடியில் ஈடுபட்ட இஸ்சியாத் அகமது என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  
Tags:    

Similar News