உள்ளூர் செய்திகள்
வாட்டி எடுக்கும் கோடை வெயில்- மெரினாவுக்கு படையெடுக்கும் மக்கள்
கோடை காலத்தின் தொடக்கத்திலேயே வெயிலின் தாக்கம் காணப்படும் நிலையில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை வெயில் மேலும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. சென்னை உள்பட அனைத்து இடங்களிலுமே வெயில் வாட்டி எடுத்துக்கொண்டு இருக்கிறது.
இதன் காரணமாக பகல் நேரங்களில் மோட்டார் சைக்கிள்களில் வெளியில் சுற்றுபவர்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். மண்டையை பிளக்கும் வெயிலால் உடலில் உள்ள நீர்சத்து குறைந்து பலருக்கு சோர்வு ஏற்படுகிறது.
இதனால் சாலை ஓரங்களில் உள்ள இளநீர் கடைகள், ஜூஸ் கடைகளில் அதிக அளவில் மக்கள் திரள்கிறார்கள். உடல் சூட்டை தணிக்கும் பானங்களை விரும்பி குடிக்கிறார்கள். மோர், கூழ் ஆகியவற்றின் விற்பனையும் சூடுபிடித்துள்ளது.
காலை, மதியம், மாலை என 3 வேளைகளிலுமே நீர் ஆகாரங்களை பருகுவதில் மக்கள் கவனம் செலுத்துகிறார்கள்.
கோடை வெயிலின் பிடியில் இருந்து தப்பிப்பதற்காக மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளுக்கும் மக்கள் அதிகமாக செல்ல தொடங்கியுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை அன்று மெரினாவுக்கு மக்கள் படையெடுக்கிறார்கள்.
இதனால் கடந்த 2 வாரங்களாகவே மெரினாவில் மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது இந்த நிலையில் காலையிலேயே மெரினாவுக்கு பலர் குடும்பத்தினரோடு வந்திருந்தனர்.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கடலில் இறங்கி மணிக்கணக்கில் குளித்து மகிழ்ந்தனர். வெயில் காலம் தொடங்கியதையடுத்து மெரினாவில் பழ ஜூஸ் விற்பனை அதிகரித்து காணப்பட்டது.
பலர் இளநீர் குடித்து சூட்டை தணித்துக்கொண்டனர். இன்று மாலையில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறார்கள்.
கோடை காலம் தொடங்கியதையடுத்து சென்னை முழுவதும் சாலை ஓரங்களில் கரும்பு ஜூஸ் கடைகள் அதிக அளவில் முளைத்துள்ளன. பெண்கள் பலர் தள்ளுவண்டிகளில் கம்பங்கூழ், மோர் ஆகிய வற்றையும் விற்பனை செய்து வருகிறார்கள். சில இடங்களில் நுங்கு விற்பனையும் நடைபெற்று வருகிறது.