உள்ளூர் செய்திகள்
குடும்ப தகராறில் கட்டிட தொழிலாளி தற்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில் குடும்ப தகராறில் கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் கீழ்வீதி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 36),
கட்டிடத் தொழி லாளி யான இவருக்கு கோவிந் தம்மாள் (34) என்கிற மனைவியும் அர்சியா (8), சுபிஷா (5), என்கிற2 மகள் களும், பிரதீஸ்வரன் 3 என்ற ஒரு மகனும் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று சக்தி வேலுக்கும் அவரது மனைவி கோவிந்தம்மாளுக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் மன விரக்தியில் இருந்த சக்திவேல் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சக்திவேல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அக்கம் பக்கத்தினர் மத்தூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட சக்திவேலின் உடலை கைபற்றி மத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோ தனைக்கு அனுப்பி வைக் கப்பட்டு வழக்கு பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.