உள்ளூர் செய்திகள்
பள்ளிகள் தரநிலை குறித்து அதிகாரிகள் ஆய்வு

பள்ளிகள் தரநிலை குறித்து அதிகாரிகள் ஆய்வு

Published On 2022-03-27 13:17 IST   |   Update On 2022-03-27 13:17:00 IST
சீர்காழி ஒன்றியத்தில் பள்ளிகள் தரநிலை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் சுமார் 40 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

சீர்காழி ஒன்றியத்தில் சுமார் 20 பள்ளிகளை கடந்த இரண்டு நாட்களாக கொள்ளிடம் வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி, கொள்ளிடம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஞானபுகழேந்தி, ஆசிரியர் பயிற்றுநர் ஐசக்ஞானராஜ் ஆகியோர் பள்ளியின் தரநிலை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். 

ஆய்வில் ஆசிரியர்களின் வருகை பள்ளியின் இருப்பு பதிவேடு ஆய்வக பதிவேடு விலையில்லா பொருட்கள் பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ள மானியங்கள் மாணவர்களின் கற்றல் திறன் கட்டிடத்தின் உறுதி தன்மை கழிப்பிட வசதி குடிநீர் வசதி ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது.

மேலும் மாணவர்களின் கற்றல் திறன் மேம்பட தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆலோசனைகள் வழங்கபட்டது.

Similar News