உள்ளூர் செய்திகள்
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு சிலைக்கான இடம் ஆய்வு
மயிலாடுதுறையில் அமைய உள்ள மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு சிலை அமைக்க இடம் ஆய்வு செய்யப்பட்டது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ள தமிழிசை மூவர் மணிமண்டபம், தரங்கம்பாடி தாலுகா தில்லையாடி கிராமத்தில் அமைந்துள்ள தியாகி தில்லையாடி வள்ளியம்மை நினைவு மண்டபம் ஆகியவற்றை செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்து அதன் பராமரிப்பு விவரங்கள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்து அறிவுரை வழங்கினார்.
தொடர்ந்து மயிலாடு துறை நகராட்சிக்குட்பட்ட வரதாச்சாரியார் பூங்காவில்¢ பெண் சமூக சீர்திருத்தவாதி, எழுத்தாளர், தேவதாசி ஒழிப்பு இயக்க மற்றும் திராவிட இயக்கத்தின் அரசியல்¢ முன்னோடி ,
மூவலூர் ராமாமிர்தம் அம்மையாருக்கு முதலமைச்சர் உத்தரவுப்படி தமிழக சட்டமன்றத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை மானிய கோரிக்கையின் போது செய்தித்துறை அமைச்சர் மூவலூர் ராமாமிர்தம் அம்மையாருக்கு சிலை அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட வரதாச்சாரியார் பூங்காவில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் ¢ நினைவு வெண்கல சிலை அமைக்க இடம் தேர்வு செய்வது குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது மயிலாடுதுறை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரவிச்சந்திரன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் அஸ்வின் குமார் ,
பொதுப்பணித்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.