உள்ளூர் செய்திகள்
தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்.

தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2022-03-25 15:57 IST   |   Update On 2022-03-25 15:57:00 IST
ராஜபாளையத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராஜபாளையம்

மத்திய அரசின் வேளாண்மை, பொருளாதார, நிதிகொள்கைகளை கண்டித்தும், பொதுநிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்துக்கொடுக்கும் நிலையை கண்டித்தும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்துசெய்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமல் படுத்தவேண்டும் உள்பட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி வருகிற மார்ச் 28,29 ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது. 

இந்த வேலைநிறுத்த போராட்டத்தை விளக்கி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் போராட்டவிளக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 
தி.மு.க. போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் திருவேட்டை போத்தி, கமலக்கண்ணன், சி.ஐ.டி.யு. தொழிற் சங்கத்தின் மாநிலச் செயலாளர் மகாலட்சுமி, விருதுநகர் மாவட்ட செயலாளர் கணேசன், என்.டி.யு.சி. தொழிற்சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் பிரபாகரன், பஸ் தொழிற்சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் கண்ணன் தமிழக விவசாயிகள் சங்க மாவட்டதலைவர் ராமச்சந்திரராஜா உள்பட ஏராளமான தொழிற்சங்கத்தினர் பங்கேற்றனர்.

Similar News