உள்ளூர் செய்திகள்
ராஜபாளையம் அருகே பெண்ணுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் சாஸ்தா கோவில் ரோடுபகுதியை சேர்ந்தவர் அழகம்மாள்(55). இவரது மகளை அதே ஊரை சேர்ந்த மாரிக்கண்ணன் என்பவர் காதலித்து வந்தார்.
பெற்றோர் கண்டித்ததால் அந்தப்பெண் மாரிக்கண்ணனிடம் பேசுவதை தவிர்த்தார். இதனால் ஆத்திரமடைந்த மாரிக்கண்ணன் சம்பவத்தன்று காதலியின் வீட்டுக்குச் சென்று தகராறு செய்துள்ளார்.
அப்போது காதலிக்கு தான் செலவு செய்த ரூ.30ஆயிரத்தை தருமாறு கேட்டார். ஆனால் அழகம்மாள் தர மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த மாரிக்கண்ணன் அவரை அரிவாளால் வெட்டினார்.
இதனை தடுக்க வந்த முகவூரை சேர்ந்த விக்னேஷ்(23) என்பவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. படுகாயம் அடைந்த 2பேரும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.