உள்ளூர் செய்திகள்
ஆழ்குழாய் கிணறு சரி செய்யும் பணி.

ஆழ்குழாய் கிணறு பழுது சரி செய்யும் பணி தீவிரம்

Published On 2022-03-25 15:37 IST   |   Update On 2022-03-25 15:37:00 IST
வடரங்கம் கூட்டு குடிநீர் திட்டம் ஆழ்குழாய் கிணறு பழுது சரி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே வடரங்கம் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றிலிருந்து கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் ராட்சத குழாய்கள் மூலம் மின் மோட்டாரை பயன்படுத்தி தண்ணீர் எடுத்து கொள்ளிடம் வட்டாரத்திலுள்ள 150-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு குடிநீருக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

இதில் நேற்று குடிநீர் வெளியே வரும் ஆழ்துளை குழாயில் பழுது ஏற்பட்டதால் குடிநீர் வெளியே வருவது நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த கொள்ளிடம் ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ், தமிழ்நாடுகுடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் முருகேசன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் செந்தாமரைக்கண்ணன், தனலட்சுமி ஜெயக்குமார் ஆகியோர் நேற்று வடரங்கம் கிராமத்திலுள்ள கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் நீர் வெளியேற்றும் நிலையத்துக்குச் சென்று பழுதான குழாயை ஆய்வு செய்தனர்.

அதனை தொடர்ந்து குடிநீர் குழாய் பழுது நீக்கும் பணி தீவிரமாக நடைபெற்று குடிநீர் வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Similar News