உள்ளூர் செய்திகள்
பட்டாசு விபத்தில் தொழிலாளி சாவு
சிவகாசி அருகே பட்டாசு விபத்தில் காயமடைந்த வடமாநில தொழிலாளி சிகிச்சை பலனின்றி இன்று பலியானார்.
சிவகாசி
சிவகாசி அருகே உள்ள மடத்துப்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் சத்திரப்பட்டியில் செட் அமைத்து பட்டாசுகள் தயாரித்து வந்தார்.
கடந்த 20ந்தேதி இங்கு கழிவு பட்டாசுகளை தீவைத்து எரித்தனர். அப்போது எதிர்பாராத விதமாக பட்டாசுகள் வெடித் தது. இதில் பணி யில் இருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த நிட் (வயது 26), நிஷான் (25), மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஹேமந்த்(20) ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக சிவகாசி தீக்காய தடுப்பு பிரிவு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் மேல்சிகிச்சைக்காக நிட், மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை நிட் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.