உள்ளூர் செய்திகள்
கைது

காரைக்காலில் பிளஸ்-1 மாணவியை தாயாக்கிய வாலிபர் கைது

Published On 2022-03-25 14:08 IST   |   Update On 2022-03-25 14:08:00 IST
காரைக்கால் அருகே பிளஸ்-1 மாணவியை தாயாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்கால்:

காரைக்கால் அருகே திரு.பட்டினத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. அதே பகுதியில் பிளஸ்1 படித்து வருகிறார்.

கடந்த சில மாதங்களாக, அந்த சிறுமிக்கும், திரு.பட்டினம் கீழையூர் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ் (வயது23) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியுள்ளது.

அப்போது சிறுமியை சரண்ராஜ் பலாத்காரம் செய்து உள்ளார். இதனால் சிறுமி கர்ப்பம் ஆனார்.

சம்பவத்தன்று மாலை சிறுமி வயிறு வலிப்பதாக தனது பெற்றோரிடம் கூறினார். அதனை தொடர்ந்து அந்த சிறுமி காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிறிது நேரத்தில், சிறுமிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்த போது, நடந்த சம்பவத்தை சிறுமி கூறியுள்ளார்.

இது குறித்து பெற்றோர் திருபட்டினம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் சரண்ராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News