உள்ளூர் செய்திகள்
தேள் கொட்டியதில் 3 வயது குழந்தை உயிரிழப்பு
உத்திரமேரூர் அருகே தேள் கொட்டியதில் 3 வயது குழந்தை பரிதாபமாக இறந்து போனது.
உத்திரமேரூர்:
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த சங்கராபுரம் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன் லட்சிய கண்ணன் (வயது 3). கடந்த 20-ந்தேதி இரவு 9 மணி அளவில் வீட்டில் குழந்தை லட்சிய கண்ணன் விளையாடி கொண்டிருந்தான்.
அப்போது திடீரென குழந்தையின் அலறல் சத்தம் கேட்டவுடன் குழந்தையின் அருகில் சென்று பார்த்தபோது குழந்தையை தேள் கொட்டியது தெரிந்தது. குழந்தையை உடனடியாக வாலாஜாபாத் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
பின்னர் குழந்தையை மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் இரவு லட்சிய கண்ணன் பரிதாபமாக இறந்து போனான்.
இதுகுறித்து சாலவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.