உள்ளூர் செய்திகள்
எந்திரத்தில் சிக்கி காயமடைந்த ஒடிசா வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
விருதுநகர்
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் நாராயணபாண்டே (வயது 27). இவர் குடும்ப சூழ்நிலை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று அவர் பிளாஸ்டிக் எந்திரத்தை இயக்கிக்கொண்டிருந்தார். அப்போது எந்திரத்தில் சத்தம் வந்தது. உடனே சூப்பர்வைசர்கள் சக்தி சுகுமாறன், திரவியம் ஆகியோர் நாராயணபாண்டேவை அழைத்து கோளாறை சரி செய்யுமாறு கூறியுள்ளனர்.
அப்போது அவர் எந்திரத்தை ஆப்செய்தால்தான் கோளாறை சரிசெய்ய முடியும் என தெரிவித்துள்ளார். ஆனால் சூப்பர்வைசர்கள் எந்திரத்தை நிறுத்தாமல் சரிபார்க்கும் பணியை செய்யுமாறு கூறியதாக தெரிகிறது.
இதையடுத்து நாராயணபாண்டே எந்திரத்தை சரிசெய்ய முயன்றார். அப்போது அதில் சிக்கி அவர் படுகாயமடைந்தார். உடனே ஊழியர்கள் அவரை விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நாராயணபாண்டே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து வில்லிபத்திரி கிராம நிர்வாக அதிகாரி சக்திமுருகன் கொடுத்த புகாரின் பேரில் தனியார் பிளாஸ்டிக் கம்பெனி சூப்பர் வைசர்கள் சக்திசுகுமாறன், திரவியம் ஆகியோர் மீது விருதுநகர் கிழக்கு போலீ சார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.