உள்ளூர் செய்திகள்
குடும்பத்துடன் தொழிலாளர்கள் ஊர்வலமாக வந்த காட்சி.

தனியார் ஆலை தொழிலாளர்கள் குடும்பத்துடன் பேரணி

Published On 2022-03-24 09:21 GMT   |   Update On 2022-03-24 09:21 GMT
தனியார் ஆலை தொழிலாளர்கள் குடும்பத்துடன் பேரணி நடத்தினர்.
புதுச்சேரி:

புதுவை தொண்டமாநத்தம் துத்திப்பட்டு கிராமத்தில் தனியார் கண்ணாடி தொழிற்சாலை இயங்கி வந்தது.

20 மாதத்துக்கு முன்பு தொழிலாளர்களை வெளியேற்றிவிட்டு ஆலையை மூடியது. பின்னர் வெளிமாநில தொழிலாளர்களால் ஆலை 
ந டத்தப்பட்டு வருகிறது. 

இதை கண்டித்து தொழிலாளர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகினற்னர். ஆனால் தொழிற்சாலை மீது  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கவில்லை. 

இதை கண்டித்து சி.ஐ.டி.யூ. மாநில தலைவர்  முருகன், செயலாளர் சீனுவாசன் தலைமையில் தொழிலாளர்கள், குடும்பத் தினருடன் ஊர்வலமாக கவர்னர் மாளிகை நோக்கி வந்தனர்.  

அப்போது கோரிக்கை களை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். அவர்களை போலீசார் ஆம்பூர் சாலை அருகே தடுத்து நிறுத்தினர். பின்னர்  முக்கிய நிர்வாகிகள் கவர்னர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
Tags:    

Similar News