உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

மனைவியை சரமாரியாக வெட்டிய 2-வது கணவர்

Published On 2022-03-24 14:41 IST   |   Update On 2022-03-24 14:41:00 IST
கிருமாம்பாக்கத்தில் மனைவியை சரமாரியாக வெட்டிய 2-வது கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி:

கிருமாம்பாக்கம் பிள்ளையார்கோவில் வீதியைச் சேர்ந்தவர் அனுசு (வயது38). இவரது 2-வது கணவர் பரிதாபி (வயது 48). இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். 

இந்நிலையில் கடந்த 18-ந் தேதி பிள்ளையார்குப்பம் முருகன் கோவில் திருவிழாவுக்கு கணவன்-மனைவி இருவரும் சென்றனர்.

அங்கு அனுசுவின் முதல் கணவனுக்கு பிறந்த மகன் தேர் இழுத்துக் கொண்டு வந்துள்ளார். அதற்கு அனுசு உதவி செய்தார். இதனை பரிதாபி கண்டித்தார். பின்னர் இருவரும் வீடு திரும்பினர். அப்போது இது சம்பந்தமாக  கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த பரிதாபி அங்கு வைத்தி ருந்த அரிவாளை எடுத்து மனைவியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்று விட்டார். இதில் அனுசுக்கு தலை மற்றும் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் சுண்டு விரலும் துண்டானது.

படுகாயம் அடைந்த அனுசு புதுவை அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சை பெற்று  பின்னர் கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பரிதாபியை தேடி வருகின்றனர்

Similar News