உள்ளூர் செய்திகள்
மேம்பால பணியை நிறுத்தக்கோரி பொதுமக்கள் மறியல் செய்த காட்சி.

மேம்பால பணியை நிறுத்தக்கோரி பொதுமக்கள் மறியல்

Published On 2022-03-24 14:37 IST   |   Update On 2022-03-24 14:37:00 IST
அரியூரில் மேம்பால பணியை நிறுத்தக்கோரி பொதுமக்கள் மறியல் செய்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புதுச்சேரி:

புதுவை-விழுப்புரம், நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் 4 வழி சாலை அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது. 

இதற்காக தென்னல் பகுதியில் இருந்து தமிழக பகுதியான கெங்கராம்பாளையம் வரை சாலையோரம் இருந்த கட்டிடங்கள், வீடுகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள், கடைகள் முழுவதும் அகற்றப்பட்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது.

இதற்கிடையே அரியூரில் உள்ள சர்க்கரை ஆலை எதிரில் மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த மேம்பால பணியால் அரியூர்  அருகே உள்ள சிவராந்தகம், அனந்தபுரம், பங்கூர், பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் பாதிக்கப்படும் சூழல் உள்ளதாக கூறப்படுகிறது.

எனவே இப்பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணியினை நிறுத்தக்கோரி அப்பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், ஆண்கள், மற்றும் பெண்கள் ஒன்றுகூடி புதுவை-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். 

பின்னர் அதனைத் தொடர்ந்து அரியூர்-அனந்தபுரம் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனை அறிந்த வில்லி யனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.  மேலும் அமைச்சர் ஜெயக்குமார் செல்போனில் தொடர்பு கொண்டு மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை ஏற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். பொது மக்களின் இந்த திடீர் மறியல் போராட்டத்தால் அப்பகு
தியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Similar News