உள்ளூர் செய்திகள்
வேளாண் அறிவியல் கல்லூரியில் உலக தண்ணீர் தினவிழா
புதுவை தவளக்குப்பம் வேளாண் அறிவியல் கல்லூரியில் உலக தண்ணீர் தினவிழா நடைபெற்றது.
புதுச்சேரி:
பாண்டிசேரி வேளாண் அறிவியல் கல்லூரியில் உலக தண்ணீர் தின விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் விழாவை தொடங்கி வைத்தார்.
புதுவை வேளாண்மை துறை தேனீ.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கதிரேசன் அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் வேளாண் புல முதல்வர் டாக்டர் சுந்தர வரதராஜன் மற்றும் கல்லூரியின் தாளா ளர் அக்ரி கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
திண்டிவனம் என்னை பனை மற்றும் நிலக்கடலை உழவர் உற்பத்தியாளர் கம்பெனியின் தலைவர் காளிதாஸ் கலந்து கொண்டார்.
கல்லூரி உதவி பேராசிரியர் மணிகண்டன் வரவேற்புரையாற்றினார். கல்லூரியின் பண்ணையிலுள்ள இடத்தில் மாணவர்கள் ஒருங்கிணைந்த வேளாண் பண்ணையம் உருவாகியுள்ளதை அண்ணாமலை பல்கலைக் கழக துணைவேந்தர் திறந்து வைத்தார்.
தண்ணீர் விழாவை கொண்டாடும் விதமாக, நெல்லுக்கு அடுத்தபடியாக தண்ணீர் சிக்கனத்தை குறைக்கும் வகையில் இயந்திரவியல் முறையில் மக்காச்சோளம் நடவு செய்முறை நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி வேளாண்துறை அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் நடைபெற்றது.
மேலும் பண்ணையில் மாணவர்கள் ஏற்படுத்தியுள்ள ஒருங்கிணைந்த வேளாண் பண்ணையம், அசோலா வளர்ப்பு, காளான் வளர்ப்பு, பயிர் திட்டமிடல், நர்சரி, மண்புழு உரம் தயாரித்தல், ஆடு வளர்ப்பு, மற்றும் மூலிகை தோட்டம். ஆகியவற்றை சிறப்பு விருந்தினர்கள் பார்வையிட்டனர்.
இந்த விழாவில் நல்லவாடு, ஆண்டியார் பாளையம், தவளக்குப்பம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சபாநாயகர் மற்றும் அமைச்சர் பரிசுகளை வழங்கினார்கள்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி மாணவ-மாணவிகள் செய்து இருந்தனர். முடிவில் உதவிப் பேராசிரியர் தமிழ்செல்வன் நன்றி கூறினார்.