உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

தேனி மாவட்டத்தில் சீருடை தைப்பவர்கள் கூலி கிடைக்காமல் தவிப்பு

Published On 2022-03-23 11:20 IST   |   Update On 2022-03-23 11:20:00 IST
தேனி மாவட்டத்தில் 3 ஆண்டுகளாக சீருடை தைக்கும் பணியில் ஈடுபடுபவர்கள் கூலி கிடைக்காமல் தவித்து வருகின்றனர்
தேவதானப்பட்டி:

தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, தேனி, பெரியகுளம் ஆகிய இடங்களில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 4500க்கும் மேற்பட்டோர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சீருடை தைத்துக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

பெரும்பாலும் விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், ஆதரவற்றோர் ஆகிய சமுதாயத்தின் கடைநிலை பெண்கள் மட்டுமே இத்தொழிலை செய்து வருகின்றனர். 

ஒரு மையத்திலிருந்து தங்களது சொந்த இடத்திற்கு துணியை எடுத்து வந்து குறிப்பிட்ட அளவில் தைத்து காஜா மற்றும் பட்டன் வைத்து அதன் பின்னர் சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கு கொடுப்பது வழக்கம்.

அதன் பின்பு துணிகள் உரிய அளவில் தைக்கப்பட்டுள்ளதா, பட்டன் காஜா சரியாக வைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து அவர்களுக்கு கூலி வழங்கப்படுவது வழக்கம். 

கடந்த 2017ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை ஒரே ஒருமுறை மட்டுமே தையல் கூலி வழங்கியதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் பலமுறை கேட்டும் உரிய பதில் கிடைக்காததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

தற்போது 2021 மற்றும் 22ம் ஆண்டுக்கான தையல் கூலி வழங்கப்பட்டு விட்டது. ஆனால் ஏற்கனவே நிலுவையில் உள்ள 3 ஆண்டு கூலி இன்னும் வழங்கப்படவில்லை. 

எனவே மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சினை¬யில் தலையிட்டு தொழிலாளர்களுக்கு கிடைக்கவேண்டிய கூலியை பெற்றுத்  தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

Similar News