உள்ளூர் செய்திகள்
ஐஸ் கட்டி மீது பிணத்தை வைக்கும் அவலம்
ஏனாம் அரசு ஆஸ்பத்திரியில் ஐஸ் கட்டி மீது பிணத்தை வைக்கும் அவலம் சமூக வலைதளத்தில் வைரலாக வீடியோ பரவி வருகிறது.
புதுச்சேரி:
புதுவையின் ஏனாம் பிராந்தியம் ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றுப்பகுதியில் உள்ளது.
இங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை கூடத்தில் ஏ.சி. இயந்திரம் பழுதாகி பல மாதமாகிறது. இதை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. அரசுக்கு தகவல் தெரிவித்தும் கண்டு கொள்ளவில்லை.
இதற்கு மாற்றாக இறந்தவர்களின் உடல் ஐஸ் பார் மீது வைக்கப்படும் நிலை உள்ளது. பழங்கால முறைக்கு ஏனாம் ஆஸ்பத்திரி திரும்பியிருப்பது மிகப்பெரிய வேதனையாக உள்ளது. இந்த நிலை பல மாதங்களாக நீடிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து பிரேத பரிசோதனை கூடத்தில் ஏ.சி. எந்திரத்தை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ஐஸ் கட்டி மீது பிணம் வைக்கப்பட்டுள்ளதை புகைப்படம் எடுத்தவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட இந்த படம் வைரலாக பரவி வருகிறது.