உள்ளூர் செய்திகள்
மேயர் மகாலட்சுமி

காஞ்சிபுரம் மாநகராட்சியில் வாரம்தோறும் மக்கள் குறை தீர்க்கும் முகாம்- மேயர் மகாலட்சுமி அறிவிப்பு

Published On 2022-03-22 17:15 IST   |   Update On 2022-03-22 17:15:00 IST
காஞ்சிபுரம் மாநகராட்சியில் முதல் முறையாக மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் 51 வார்டுகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக அளித்தனர்.
காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு முதல் மேயராக தி.மு.க.வைச் சேர்ந்த மகாலட்சுமி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் முதல் முறையாக மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் 51 வார்டுகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக அளித்தனர். மேயர் மகாலட்சுமி இதில் கலந்து கொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டார். பெரும்பாலானோர் சாலை, குடிநீர், தெரு விளக்கு உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை அளித்து இருந்தனர். 
மனுக்களை பெற்றுக் கொண்ட மேயர் மகாலட்சுமி, உடனடியாக தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இது தொடர்பாக மேயர் மகாலட்சுமி கூறும்போது, “காஞ்சிபுரம் மாநகராட்சியில் முதல் முறையாக மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடந்து உள்ளது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

எனவே இனி வரும் நாட்களில் வாரம் தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்படும்” என்றார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News