உள்ளூர் செய்திகள்
முதலமைச்சர் முக ஸ்டாலின் - முன்னாள் சபாநாயகர் தனபால்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முன்னாள் சபாநாயகர் தனபால் பாராட்டு

Published On 2022-03-22 07:33 GMT   |   Update On 2022-03-22 07:33 GMT
பட்ஜெட்டில் உள்ள அம்சங்களை பாராட்டி பேசியதற்காக, முன்னாள் சட்டப்பேரவை தலைவர் தனபாலுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை:

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான 2-வது நாள் பொதுவிவாதம் இன்று நடைபெற்றது.

அப்போது பேசிய அவினாசி சட்டமன்ற அ.தி.மு.க. உறுப்பினரும், முன்னாள் சபாநாயகருமான தனபால், பட்ஜெட்டில் நிதி தொடர்பாக பல்வேறு குறைபாடுகள் உள்ளதாக சுட்டிக்காட்டினார். அதற்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு விளக்கங்களை அளித்தார்.

பின்னர் பேசிய தனபால், பெரியார் கருத்துக்களை பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்க 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதையும், தமிழ்மொழி அகரமுதலிக்கு நிதி ஒதுக்கியதற்கும் அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

இதற்கு பதிலளித்து பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் சபாநாயகர் தனபால், பட்ஜெட்டில் பல்வேறு குறைபாடுகளை சுட்டிக்காட்டி கோரிக்கை வைத்துள்ளதாகவும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.

மேலும், பட்ஜெட்டில் உள்ள அம்சங்களை பாராட்டி பேசியதற்காக, முன்னாள் சட்டப்பேரவை தலைவர் தனபாலுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

பின்னர் முதல்-அமைச்சருக்கு முன்னாள் சபாநாயகர் தனபால் தன்னுடைய நன்றியை தெரிவித்துக்கொண்டார்.


Tags:    

Similar News