உள்ளூர் செய்திகள்
சிறப்பு அலங்காரத்தில் வன்புருஷோத்தம பெருமாள் தாயாருடன் அருள்பாலிப்பு.

வன்புருஷோத்தம பெருமாள் கோவில் கொடியேற்றம்

Published On 2022-03-22 12:54 IST   |   Update On 2022-03-22 12:54:00 IST
சீர்காழி அருகே வன்புருஷோத்தம பெருமாள் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சீர்காழி:

சீர்காழி அடுத்த திருநாங்கூர் கிராமத்தில் 108 திவ்ய தேசங்களில்
ஒன்றான வன்புருஷோத்தம பெருமாள் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் வருடாந்திர திருவிழா கொடியேற்றத்துடன்
தொடங்கியது.

முன்னதாக கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு
அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை காட்டப்பட்டது.
தொடர்ந்து  உற்சவ கொடியேற்றப்பட்டது. இதில் திரளான
பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தாக்கள் ரங்கநாதன்,
கண்ணன் ,கிருஷ்ணமாச்சாரியார், ஆகியோர் செய்திருந்தனர்.
முக்கிய நிகழ்வாக27-ஆம் தேதி வெண்ணைத்தாழி உற்சவம்,
28-ம் தேதி தேரோட்டமும், 30-ம் தேதி திருக்கல்யாண
உற்சவம் நடைபெற உள்ளது.

Similar News