உள்ளூர் செய்திகள்
நள்ளிரவில் காதலியை பார்க்கப்போன வாலிபர் மின்வேலியில் சிக்கி பலி- நில உரிமையாளர் கைது
காதல் விவகாரத்தில் வாலிபர் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட புகாரில் திடீர் திருப்பமாக மின்வேலியில் சிக்கி பலியான சம்பவம் ஊத்தங்கரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை அருகே உள்ள நாயக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் வெங்கடேஷ் (வயது 20). இவர் பிளஸ்-2 வரை படித்து விட்டு கூலி வேலைக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை நாயக்கனூர் ஏரி அருகே வெங்கடேஷ் உடலில் காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் வெங்கடேசனை மர்ம கும்பல் கொலை செய்து ஏரி அருகே பிணத்தை வீசி விட்டு சென்றதாக புகார் தெரிவித்தனர். இதையடுத்து வாலிபர் வெங்கடேஷ் பிணத்துடன் சிங்காரப்பேட்டை- அத்திப்பாடி சாலையில் திடீரென அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி, ஊத்தங்கரை டி.எஸ்.பி. அலெக்ஸ்சாண்டர், சிங்காரப்பேட்டை இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பத்மாவதி மற்றும் போலீசார் விரைந்தனர்.
அப்போது நடுரோட்டில் பிணத்தை வைத்து மறியல் செய்தவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது வெங்கடேசின் உறவினர்கள் போலீசாரிடம் கூறும் போது, வெங்கடேஷ், வேறு சமூக பெண்ணை காதலித்து வந்ததாகவும், இதனால் பெண் குடும்பத்தினர் கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகம் உள்ளதாகவும் தெரிவித்தனர்.
வெங்கடேஷ் சாவு குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர். இதை ஏற்று வெங்கடேஷ் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதையடுத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இதில் வாலிபர் வெங்கடேஷ், மின்வேலியில் சிக்கி பலியானது தெரியவந்தது.
நேற்றுமுன்தினம் நள்ளிரவில் வெங்கடேஷ், வீட்டுக்கு தெரியாமல் தனது காதலியை பார்ப்பதற்காக புறப்பட்டு சென்றார். அப்போது செல்லும் வழியில் அங்கு விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டு இருந்த மின்வேலியில் சிக்கி வெங்கடேஷ், சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து அங்கு வந்த நிலத்தின் உரிமையாளர் அன்பழகன், வாலிபர் வெங்கடேஷ் மின்வேலியில் பலியானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் தன் மீது போலீஸ் வழக்கு பாயுமோ? என்று நினைத்து பயந்து வெங்கடேஷ் உடலை, நாயக்கனூர் ஏரி அருகே கொண்டு சென்று போட்டு விட்டு சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து சிங்காரப்பேட்டை போலீசார், அன்பழகனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.