உள்ளூர் செய்திகள்
சாலையோரத்தில் படுத்து கிடந்த மலைப்பாம்பை படத்தில் காணலாம்.

சாலையில் குறுக்கே கிடந்த 10 அடி நீள மலைப்பாம்பு

Published On 2022-03-20 15:10 IST   |   Update On 2022-03-20 15:10:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே சாலையின் குறுக்கே 10 அடி நீள மலைப்பாம்பு கிடந்தது.
வேப்பனப்பள்ளி, 

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள உண்டிகை நத்தம் செல்லும் கிராம சாலையில் நேற்று மாலை 9 மணி அளவில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று சாலையில் குறுக்கே ஊர்ந்து கொண்டு இருந்தது. 

இந்த மலைப் பாம்பு சாலையின் குறுக்கே படுத்துக் கொண்டிருந்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் அங்கு வந்த வாகன ஓட்டிகள் சாலை கடக்க முடியாமல் இருபுறமும் நின்று கொண்டிருந்தனர்.

இதையடுத்து அப்பகுதிக்கு பொதுமக்களே நீண்ட நேரம் போராடி சாலையில் இருந்து பாம்பை கீழே இறக்கி   பாம்பை பத்திரமாக பிடித்தனர். 

இதையடுத்து அந்த பாம்பை பொதுமக்கள் பாதுகாப்பாக் கொங்கனப்பள்ளி காப்பு காட்டில் கொண்டு சென்று விட்டனர். 10 அடி நிளமுள்ள  மலைப்பாம்பு சாலையில் குறுக்கே படுத்து கிடந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News