உள்ளூர் செய்திகள்
.

முஸ்லீம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

Published On 2022-03-20 14:53 IST   |   Update On 2022-03-20 14:53:00 IST
கிருஷ்ணகிரியில் அனைத்து ஜமாத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் கிருஷ்ணகிரி அஹ்லே சுன்னத் வல் ஜமாத் சொசைட்டி எனப்படும் அனைத்து ஜமாத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பட்டத்திற்கு அனைத்து ஜமாத் தலைவர் சையத் இர்பானுல்லா உசைனீ தலைமை தாங்கினார். செயலாளர் ஆசாத் மற்றும் அனைத்து ஜமாத்தார்கள் முன்னிலை வகித்தனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்தியாவில் அனைத்து மதத்தினரும் மத அடையாளங்கள் உள்ளது. அந்தந்த மதத்தினர் அவர்களது ஆடைகளை அணி வருகின்றனர். அதுபோல் இஸ்லாமிய மதத்தில் பெண்கள் ஹிஜாப் அணிந்து செல்கின்றனர். இந்தியஅரசியலமைப்பு சட்டம் 25 மூலம் அனைத்து மதத்தினருக்கும் மத சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் இருந்தே முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்து கல்வி நிலையங்களுக்கு சென்று வருகின்றனர்.

கர்நாடக அரசின் இந்த நடவடிக்கை அரசியலமைப்பு சட்டம் கொடுத்த உரிமைக்கு எதிரானதாகும். முகத்திரை என்னும் ஹிஜாப் அணிவது பெண்களின் தனிப்பட்ட உரிமை அந்த உரிமையில் தலையிட யாருக்கும் அதிகாரம் இல்லை என்று கர்நாடக அரசையும் உயர்நீதி மன்றத்தையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

Similar News