உள்ளூர் செய்திகள்
புதுச்சேரியில் ஒருவருக்கு கொரோனா
புதுவையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தில் 249 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் மாகியை சேர்ந்த ஒருவருக்கு மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுவை, காரைக்கால் ஏனாமில் யாருக்கும் தொற்று ஏற்படவில்லை.
தற்போது புதுவையில் 7பேர், காரைக்காலில் 4 பேர், மாகியில் 2 பேர் என 13 பேர் மட்டுமே வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவ மனையில் யாரும் தொற்றால் அனுமதிக்கப்படவில்லை. ஒருவர் தொற்றில் இருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளார்.
புதுவை மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 65 ஆயிரத்து 772 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதில் 1 லட்சத்து 63 பேருக்கு 797 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். 1962 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.