உள்ளூர் செய்திகள்
தற்காப்பு கலை பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு கராத்தே சுந்தர்ராஜன் சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கிய காட்சி.

தற்காப்பு கலை பயிற்சி நிறைவு விழா

Published On 2022-03-19 10:20 IST   |   Update On 2022-03-19 10:20:00 IST
புதுப்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் தற்காப்பு கலை பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.
புதுச்சேரி:

புதுவை குயவர் பாளையத்தில் உள்ள  புதுப்பாளையம் அரசு நடுநிலை   பள்ளியில் மாணவிகளுக்கான தற்காப்பு கலை கராத்தே பயிற்சி வகுப்புகள் நிறைவு விழா நடைபெற்றது.

 விழாவிற்கு புதுவை மாநில கோஜுரியூ  கராத்தே சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் தலைமை தாங்கினார்.  தலைமை ஆசிரியை (பொறுப்பு)  ஜீவிதா  மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயன்களைப் பற்றி பேசி வாழ்த்துரை வழங்கினார்.

மூத்த பயிற்சியாளர்  சிவமதி  தற்காப்பு கலை பற்றி  செயல் முறை விளக்கம்  அளித்தார். ஆசிரியர்கள் பல்வின் மேரி, புவனேஸ்வரி, தங்கவேலு, மீனா, தனலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

தற்காப்பு கலை பயிற்சி பெற்ற அனைத்து மாணவிகளுக்கும் சான்றிதழ் கள் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.  விழா விற்கான  ஏற்பாடுகளைஓவிய ஆசிரியர்  தங்கவேலு செய்திருந்தார்.

Similar News