உள்ளூர் செய்திகள்
புதுவை ஜிப்மர் மருத்துவக் கல்லுவரியில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது.

ஜிப்மரில் ஹோலி பண்டிகை-மாணவர்கள் கொண்டாட்டம்

Published On 2022-03-18 14:50 IST   |   Update On 2022-03-18 14:50:00 IST
ஜிப்மரில் மாணவர்கள் ஹோலி பண்டிகை கொண்டாடினார்கள்.
புதுச்சேரி:

வடமாநில மக்களின் வசந்த விழாவாக கருதப்படும் ஹோலி பண்டிகை நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் படிக்கும் புதுவை ஜிப்மர் மருத்துவக் கல்லுவரியில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. 

மாணவ- மாணவிகள் ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை துவவியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும், நடனமாடியும் உற்சாகமாக கொண்டாடினர். பள்ளத்தில் தண்ணீரை நிரப்பி, சேற்றில் விளையாடி மகிழ்ந்தனர். பிரபலமான பாடல்களை ஒலிபரப்பி மாணவர்கள் ஆட்டம்போட்டனர்.

Similar News