உள்ளூர் செய்திகள்
பட்டியல் அணி தலைவர் தமிழ்மாறன் அறிமுக நிகழ்ச்சியில் மாநில தலைவர் சாமிநாதனுக்கு சால்வை அணிவித்தார்.

பிரதமரின் சாதனைகளை மக்களிடம் எடுத்து கூற வேண்டும்- பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் பேச்சு

Published On 2022-03-18 14:30 IST   |   Update On 2022-03-18 14:30:00 IST
பிரதமரின் சாதனைகளை மக்களிடம் எடுத்து கூற வேண்டும் என்று பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் பேசினார்.
புதுச்சேரி:

புதுவை முழுவதும் பட்டியலின மக்கள் வசிக்கும் இடங்களில் பாரதீய ஜனதா கொடியேற்று நிகழ்ச்சி நடத்த வேண்டுமென மாநிலத் தலைவர் சாமிநாதன் பேசினார். 
பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் புதியதாக நியமனம் செய்யப்பட்டுள்ள பட்டியல் அணி தலைவர் தமிழ்மாறனை அறிமுகம் செய்யும் கூட்டம் நடந்தது. 

நிகழ்ச்சியில் அசோக்பாபு எம்.எல்.ஏ., பொதுச்செயலாளர் மோகன்குமார், மாநில துணைத்தலைவர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் பா.ஜனதா பட்டியல் அணி மாநில தலைவராக நியமிக்கப்பட்ட தமிழ்மாறனை அறிமுகம் செய்து பேசியதாவது:-

புதுவை மாநில பட்டியலில் தலைவராக தமிழ்மாறனை நியமித்தது பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு துணையாக இருக்கும். புதுவையை பொறுத்தவரையில் வருகிற தேர்தலில் 4 பட்டியலின சட்டமன்ற உறுப்பினர்களை பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற செய்ய வேண்டும். 

பிரதமரின் சாதனைகளை பட்டியலின மக்களுக்கு கொண்டு சேர்க்கும் விதமாக அவர்கள் வசிக்கும் இடத்தில் கட்சியை வலுப்படுத்தி அங்கு பாரதீய ஜனதா கட்சியின் கொடி ஏற்றி நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். பட்டியலின தலைவர்களை ஒருங்கிணைத்து பா.ஜ.க.வில் இணைக்க வேண்டும். பா.ஜ.க. மாநில பட்டியலின தலைவர் தமிழ்மாறனுக்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். 

புதுவை மாநில பா.ஜ.க. பட்டியல் அணி தலைவர் தமிழ்மாறன் அனைவருக்கும் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. புதுவை மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News