உள்ளூர் செய்திகள்
கைது

காரைக்காலில் 3 கடைகளை உடைத்து திருடிய கொள்ளையன் கைது

Published On 2022-03-17 16:23 IST   |   Update On 2022-03-17 16:23:00 IST
காரைக்காலில் 3 கடைகளின் ஷட்டரை உடைத்து திருடிய கொள்ளையனை போலீசார் கைது செய்துள்ளனர்.
காரைக்கால்:

காரைக்கால் திருநள்ளாறு சாலை ஒழுங்குமுறை விற்பனை கூடம் அருகே, இஸ்மாயில் என்பவருக்கு சொந்தமான மளிகை மற்றும் கோழிகடை உள்ளது. சம்பவத்தன்று இரவு வழக்கம் போல், கடைகளை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுவிட்டனர்.

மறுநாள் காலை வந்து பார்த்த போது, 3 கடையின் ‌ஷட்டர் உடைக்கபட்டு பணம் மற்றும் பொருட்கள் திருடு போய் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து, காரைக்கால் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

இதன் பேரில், காரைக்கால் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, கடை முன்பு பொருத்தபட்டு இருந்த சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது மர்மநபர் ஒருவர் கடை ‌ஷட்டரை உடைத்து பாம்பு போல நெளிந்து உள்ளே சென்று திருடி விட்டு தப்பிச் செல்வது தெரிய வந்தது.

போலீசார் நடத்திய விசாரணையில், கடை அருகே வசிக்கும் ரகுமான் (வயது21) என்பவர், மேற்கண்ட கடைகளின் ‌ஷட்டரை உடைத்து, கைவரிசை காட்டி இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து காரைக்கால் நகர் பகுதியில் பதுங்கியிருந்த ரகுமானை, போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த ரூ.5 ஆயிரம் பணம் மற்றும் கடை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Similar News