உள்ளூர் செய்திகள்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் 275 அரசு அலுவலர்களுக்கு அடிப்படை பயிற்சி

Published On 2022-03-17 14:50 IST   |   Update On 2022-03-17 14:50:00 IST
பரவலாக்கப்பட்ட பயிற்சி மையங்கள் மூலம் கடந்த 4 மாதங்களில் மட்டும் சுமார் 4 ஆயிரம் பேர் உள்பட இதுவரை சுமார் 1,34,835 அரசு அலுவலர்கள் பயிற்சி பெற்றுள்ளனர்.
காஞ்சிபுரம்:

காஞ்சிபுரத்தில் உள்ள பக்தவத்சலம் பாலிடெக்னிக் கல்லூரியில் அரசு அலுவலர்களுக்கான அடிப்படை பயிற்சியை மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

இப்பயிற்சியில் பல்வேறு துறைகளில் உள்ள காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த அரசு அலுவலர்கள் 275 பேர் பயிற்சி பெற உள்ளனர். பரவலாக்கப்பட்ட பயிற்சி மையங்கள் மூலம் கடந்த 4 மாதங்களில் மட்டும் சுமார் 4 ஆயிரம் பேர் உள்பட இதுவரை சுமார் 1,34,835 அரசு அலுவலர்கள் பயிற்சி பெற்றுள்ளனர்.

நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், சென்னை அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி மாவட்ட வருவாய் அலுவலர் கீதா, கல்லூரி முதல்வர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News