உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு - ஓம்சக்திசேகர் வரவேற்பு

Published On 2022-03-17 08:40 GMT   |   Update On 2022-03-17 08:40 GMT
அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றம் அ.தி.மு.க. அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என்ற வரலாற்று சிறப்பு மிக்க உத்தரவை வழங்கி உள்ளது.
புதுச்சேரி:

புதுவை மேற்கு மாநில அ.தி.மு.க செயலாளர் ஓம்சக்திசேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உயர் சிறப்பு மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஜெயலலிதா வழியில் செயல்படும் அ.தி.மு.கவின் சமூக நீதிக்கு கிடைத்த மேலும் ஒரு மணி மகுடம். 2020-ம் ஆண்டு அ.தி.மு.க.  இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி  தமிழக முதல்-அமைச்சராக இருந்த போது அரசு மருத்துவ கல்லூரிகளில் உயர் சிறப்பு மருத்துவ மேற்படிப்புகளில் நீட் தகுதி பெற்ற அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க அரசாணை வெளியிடப்பட்டது. 

இதை எதிர்த்து தனியார் டாக்டர்கள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அ.தி.மு.க. அரசு  பிறப்பித்த அரசாணை செல்லும் என்ற வரலாற்று சிறப்பு மிக்க உத்தரவை வழங்கி உள்ளது. 

இது அ.தி.மு.க  ஒருங்கிணைப்பாளர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். 7.5 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வந்து மாணவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்றியது போல, அரசு மருத்துவர்களின் கனவையும் நிறைவேற்றி உள்ளார். 

தி.மு.க.வும், அதன் தலைவரும் தாங்கள்தான் இந்த இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தது போல தம்பட்டம் அடித்து கொள்கின்றனர். 2020-ம் ஆண்டு அ.தி.மு.க. அரசு மேல் முறையீடு செய்தபோது தன்னை வழக்கில் இணைத்து கொள்ளக்கூட மனமில்லாத தி.மு.க. இப்போது மார்தட்டி கொள்வது தி.மு.க.வின் இரட்டை வேடத்தை காட்டுகிறது. அரசு மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு பெற்று தந்த அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்களை  மேற்கு மாநில அ.தி.மு.க. வணங்கி போற்றுகிறது. 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 
Tags:    

Similar News