உள்ளூர் செய்திகள்
முக ஸ்டாலின்

உள்ளாட்சி தேர்தலில் கூட்டணிக்கு எதிராக செயல்பட்ட தி.மு.க.வினர் நீக்கம்- மு.க.ஸ்டாலின்

Published On 2022-03-17 03:51 GMT   |   Update On 2022-03-17 03:51 GMT
கூட்டணியில் அங்கம் வகிக்கும் தோழமை கட்சிகளின் வேட்பாளர்களுக்கு எதிராகவும், கழக தோழர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்துகிற வகையிலும் செயல்பட்ட தி.மு.க. நிர்வாகிகள் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார்.
சென்னை:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு எதிராக செயல்பட்ட தி.மு.க. நிர்வாகிகள் மீது கட்சி தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதுகுறித்து தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

கூட்டணியில் அங்கம் வகிக்கும் தோழமை கட்சிகளின் வேட்பாளர்களுக்கு எதிராகவும், கழக தோழர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்துகிற வகையிலும் செயல்பட்ட திருப்பூர் கிழக்கு மாவட்டம், காங்கேயம் நகர இளைஞர் அணி அமைப்பாளர் சூரியபிரகாஷ், தேனி வடக்கு மாவட்டம் தேனி நகர பொறுப்பாளர் பாலமுருகன், பெரியகுளம் நகர பொறுப்பாளர் முரளி, போடி நகர செயலாளர் செல்வராஜ்.

நீலகிரி மாவட்டம், கூடலூர் ஒன்றியம் தேவர் சோலை பேரூர் கழக செயலாளர் மாதேவ் ஆகியோர் கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Tags:    

Similar News