உள்ளூர் செய்திகள்
கைது

சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்- வாலிபர் கைது

Published On 2022-03-16 12:50 IST   |   Update On 2022-03-16 12:50:00 IST
காரைக்கால் அருகே திருமணம் செய்துகொள்வதாக கூறி சிறுமியை கடத்தில் பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால்:

காரைக்கால் அருகே திருநள்ளாறை அடுத்த அம்பகரத்தூர் பகுதியில், ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, கடந்த 7-ந் தேதி வழக்கம் போல், காலையில் பள்ளிக்கு சென்றவர் மாலை வீடு திரும்பவில்லை.

சிறுமியின் பெற்றோர் பல இடங்களில் தேடியும் சிறுமி குறித்த விபரம் தெரியவில்லை, பள்ளி அருகே விசாரித்ததில், சிறுமி யாரோ ஒரு நபருடன் சென்ற விபரம் அறிந்து, உடனே இதுகுறித்து திருநள்ளாறு போலீஸ் நிலையத்தில், சிறுமியை காணவில்லை. சிறுமியை யாரோ கடத்தி இருக்கலாம் என்று சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்தனர்.

அந்த புகாரின் பேரில், திருநள்ளாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின்பாரதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து சிறுமியை பல்வேறு மாவட்டங்களில் தேடிவந்தனர்.

பின்னர், சிறுமியின் செல்போன் எண்ணை வைத்து துப்புதுலக்கிய போது அவர் சென்னையில் இருப்பது கண்டறியப்பட்டது. உடனே அம்பகரத்தூர் புறக்காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் மற்றும் போலீசார், கடந்த கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை சென்று சிறுமியை மீட்டு காரைக்கால் கொண்டு வந்தனர்.

விசாரணையில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை அருகே செட்டிமண்டபம் முத்தையா நகரை சேர்ந்த முபாரக் என்பவரது மகன் முஷாரப் (வயது 22) (கையில் பச்சை (டாட்டூ) குத்தும் தொழில் செய்துவருபவர்) என்பவர் சிறுமியிடம் வலைதளம் மூலம் ஏற்பட்ட நட்புமூலம் அம்பகரத்தூர் வந்து நேரடி தொடர்பை ஏற்படுத்திகொண்டார்.

பின்னர், சிறுமியை திருமணம் செய்து கொள்கிறேன் என ஆசைவார்த்தைகள் கூறி சென்னைக்கு கடத்தி சென்று பலமுறை பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, சிறுமியின் வாக்குமூலத்தின் பேரில், முஷாரப் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Similar News