உள்ளூர் செய்திகள்
டெல்லியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சந்தித்து பேசினார். அருகில் செல்வகண

புதுச்சேரிக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும்-மத்திய மந்திரியிடம் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வலியுறுத்தல்

Published On 2022-03-16 09:43 IST   |   Update On 2022-03-16 09:43:00 IST
வருகிற நிதி ஆண்டில் புதுவைக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும் என்று மத்திய மந்திரியிடம் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
புதுச்சேரி:

டெல்லி சென்றுள்ள புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பாராளுமன்ற வளாகத்தில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், அணுசக்தி துறை மற்றும் பிரதமர் அலுவலக விவகாரங்கள் துறை மந்திரி ஜிதேந்திர சிங், மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை இணை மந்திரி முருகன் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

பின்னர், கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை மந்திரி கிஷண்ரெட்டியை சந்தித்து, புதுவை மாநிலத்தில் உள்ள நல்லவாடு, நரம்பை காலாப்பட்டு ஆகிய கடலோர பகுதிகளை சுதேசிதர்ஷன் (கடற்கரை வட்டம்) திட்டத்தின் கீழ் சுற்றுலாத்தலமாக மேம்படுத்துவதற்கு பொதிய நிதியினை ஒதுக்கி, அப்பகுதிகளில் சுற்றுலா திட்டத்தை செயல்படுத்த வேண்டும். நல்லவாடு, நரம்பை, காலாப்பட்டு ஆகிய கடற்கரை பகுதிகளை இத்திட்டத்தின் கீழ் தற்போது மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள முடியாவிட்டாலும், தங்கள் சுற்றுலா துறையின் கீழ் ஏதாவது ஒரு திட்டத்தில் இப்பகுதிகளை மேம்படுத்தப்பட்ட சுற்றுலாத்தலமக மாற்றுவதற்கு, இந்த ஆண்டே நிதி ஒதுக்கி பணிகளை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை கடிதம் அளித்தார். 

இதை தொடர்ந்து, நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்தார். அப்போது, புதுவை மாநிலத்தில் நிலவுகின்ற நிதிநிலை குறித்து பேசிய அவர், வருகிற நிதியாண்டில் கூடுதலாக நிதி வழங்க சபாநாயகர் கோரிக்கை விடுத்தார்.

இந்த சந்திப்பின் போது செல்வகணபதி எம்.பி. அங்காளன் எம்.எல்.ஏ. பா.ஜனதா புதுவை மாநில பொருளாதார பிரிவு பொறுப்பாளர் ரமேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் டி.எம்.வருண் ஆகியோர் உடனிருந்தனர்.

Similar News