உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

நிதி கசிவை தடுக்க அரசு நடவடிக்கை- அ.தி.மு.க. வலியுறுத்தல்

Published On 2022-03-15 14:05 IST   |   Update On 2022-03-15 14:05:00 IST
நிதி கசிவை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.க. வலியுறுத்தல்
புதுச்சேரி:

புதுவை கிழக்கு   மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:

புதுவை கல்வித் துறை இயக்குனர் தனது பிள்ளையை அரசு பள்ளியில் சேர்த்திருப்பது வரவேற்புக்குரியது. 

இதனை அனைத்து அரசு ஊழியர்களும் பின்பற்றி, தங்கள் பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் சேர்க்க வேண்டும். தனியார் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்கும் அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு ரூ.25 ஆயிரத்தை அரசு வழங்கி வருகிறது. 

இதனை ரத்து செய்து அரசு ஊழியர்களின் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்கும் சட்டம் கொண்டுவர வேண்டும்.  கடந்த ஆண்டு அரசு கல்வித் துறைக்கு ரூ.676 கோடி செலவிட்டுள்ளது. அதுபோல் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.2 ஆயிரம் 500 கோடிவரை செலவு செய்துள்ளது. 

ஆனால், கடந்த 4 ஆண்டுகளில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களில் 6 பேர் மட்டுமே மருத்துவ படிப்பிற்கு தேர்வாகியுள்ளனர். 

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் தமிழ கத்தை போல் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங் கும் சட்டத்தை கொண்டு வர வேண்டும். 

தமிழகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனி சாமி கொண்டு வந்த 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு மூலம் கடந்த 2 ஆண்டுகளில் 1018 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் பயன் அடைந்துள்ளனர். 

இது இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத ஒன்று. அனைத்து குடும்பத்தினரும் எடப்பாடி பழனிசாமியை  தெய்வமாக வணங்குகிறார்கள். 

அரசு ஊழியர்களுக்கு ரூ.25 ஆயிரம் நிதி வழங்குவதைப்போல் 20-க்கும் மேற்பட்ட வழி களில் அரசுக்கு நிதி கசிவு ஏற்படுகிறது. அவைகளை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். 

இவ்வாறு அன்பழகன் கூறினார்.

Similar News