உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

பள்ளி வாகனத்தில் டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை

Published On 2022-03-15 11:53 IST   |   Update On 2022-03-15 11:53:00 IST
பள்ளி வாகனத்தில் டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:

வில்லியனூர் அருகே பொறையூர் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் குணசுந்தர்(வயது62). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் வாகன டிரைவராக வேலை செய்து வந்தார். இவருக்கு சீத்தா லட்சுமி என்றமனைவியும், வெங்கடேசன் என்ற மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணமாகி அவர்கள் கணவருடன் தனித்தனியாக குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.

வெங்கடேசன் சென்னையில் தங்கி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 4 மாதமாக சீத்தா லட்சுமி தனது மகனுக்கு உதவியாக சென்னையில் தங்கியிருந்து வருகிறார். இதனால் குணசுந்தர் முத்திரையர்பாளையம் கல்கி நகரில் உள்ள தனது மூத்த மகள் நிஷா வீட்டில் தங்கி பள்ளிக்கு வேலைக்கு சென்று வந்தார்.

இதற்கிடையே குண சுந்தருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. குணசுந்தர் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு மகள் வீட்டு வந்தார். இதனை நிஷா கண்டித்தார். 

குணசுந்தர் தான் வேலை பார்க்கும் பள்ளி வாகனம் பழுதாகி விட்டது என்றும் அதனை சரி செய்ய செல்வதாக மகளிடம் கூறி சென்றார்.

ஆனால் அதன் பிறகு குணசுந்தர் வீட்டுக்கு சாப்பிட வராததால் நிஷா போன் செய்து கேட்ட போது வேலை இருப்பதால் தன்னை எதிர்பார்க்க வேண்டாம் என்று குணசுந்தர் கூறினார்.

இந்தநிலையில்  குணசுந்தர் தான் வேலை பார்க்கும் பள்ளி வாகனத்திலேயே தூக்குபோட்டு பிணமாக தொங்கினார். மது குடித்ததை மகள் கண்டித்ததால் குணசுந்தர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அவரது மகள் நிஷா கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News