உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

முழுமையான பட்ஜெட்டை அரசு தாக்கல் செய்யவேண்டும்-பா.ம.க. வலியுறுத்தல்

Published On 2022-03-15 11:42 IST   |   Update On 2022-03-15 11:42:00 IST
மார்ச் மாதத்திற்குள் முழுமையான பட்ஜெட்டை அரசு தாக்கல் செய்யவேண்டும் என பா.ம.க. வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரி:

புதுவை மாநில பா.ம.க அமைப் பாளர் கணபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

 ஒரு மாநிலத்தின் பொருளாதாரத்தின் அடையாளமாக விளங்குவது அம்மாநிலத்தின் பட்ஜெட் ஆகும். 

ஆனால் புதுவை மாநிலத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக மார்ச் மாதங்களில் முழுமையான பட்ஜெட் சமர்பிக்க வில்லை. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க மட்டும் 4 மாதத்திற்கான அனுமதியைப் பெற்று எந்த புதிய திட்டங்களையும் செயல்படுத்த முடியாமல் போய்விடுகிறது. 

அதனால் மக்களுக்குப் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. அவசர காலங்களிலும் தேர்தல் காலங்களில்  மட்டுமே இதுபோன்ற அனுமதி பெறும் வழக்கம் உண்டு. ஆனால் புதுவையை பொறுத்தவரை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இதுவே வழக்கமாகி விட்டது. அதனால் புதுவை மாநிலத்தின் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டு மற்ற மாநிலங்களை விட புதுவை மாநிலம் பின்தங்கியுள்ளது. 

எனவே 2022-23-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இந்த மாதம் இறுதிக்குள் சட்டசபையில் முழுமையாக தாக்கல் செய்ய வேண்டும்.

மேலும் மத்தியிலும் மாநிலத்திலும் இணக்கமான ஆட்சி வந்தால்தான் மாநிலம் வளர்ச்சிபெறும் என்று சொல்லி ஆட்சிக்கு வந்துவிட்டு. மீண்டும் கடந்த காலங்களில் செய்யும் தவறை இந்த அரசு செய்யக்கூடாது. 

வெளிப்படையாக தவறும் பட்சத்தில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்வதில் உள்ள இடர்பாடுக ளையும், தடை களையும் முதல்&அமைச்சர் பொதுமக்களிடம் வெளிப்படையாக தெரி விக்கவேண்டும். 

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Similar News