உள்ளூர் செய்திகள்
ரெயில்மோதி விபத்து.

ரெயில் மோதி வாலிபர் பலி

Published On 2022-03-14 17:11 IST   |   Update On 2022-03-14 17:11:00 IST
திருமங்கலம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் ரெயில் மோதி பலியானார்.
திருமங்கலம்

திருமங்கலம் அருகே  உள்ள கப்பலூர் முத்தாலம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த தனுஷ்கோடி-ஜீவா தம்பதியின் மகன் ரமேஷ்(வயது27), திருமணம் ஆகவில்லை. இவர் திருமங்கலம் தனியார் வங்கியில் கடன் வசூலிக்கும் ஊழியராக  இருந்தார். ஒருவாரத்திற்கு முன்பு உடல்நலக்கோளாறு காரணமாக பணியில் இருந்து  வீட்டில் இருந்தார்.  

இந்தநிலையில் ரமேசின் தாயார் ஜீவா இன்றுகாலை  திருமங்கலம் செல்வதாகவும் சிறிதுநேரம் கழித்து நீயும் திருமங்கலத்திற்கு வா மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என கூறிவிட்டு திருமங்கலம் சென்று விட் டார். இதனையடுத்து ரமேஷ் கப்பலூரில் இருந்து திருமங்கலம் செல்ல சுங்கச்சாவடி பஸ்நிறுத்தத்திற்கு வரும்போது அங்கிருந்த ரெயில்வே தண்டவாளத்தை கடக்கமுயன்றார். 

அந்த சமயத்தில் மதுரையில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்ற பயணிகள் ரெயில் வந்தது. இதனை கவனிக்காத ரமேஷ் ரெயில்மோதி விபத்தில் உடல் 2துண்டாக சிதறிய நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  

தகவலறிந்த மதுரை ரெயில்வே போலீசார் ரமேஷின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

 மேலும் ரமேஷ் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது உயிரிழந்தாரா? அல்லது வேறு காரணமா? என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News