உள்ளூர் செய்திகள்
பெண் காவலர்களுக்கான பயிற்சி வகுப்பை வேலூர் சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா தொடங்கி வைத்து பேசிய காட்சி.

பெண்கள் தங்கள் உடலை பேணி பாதுகாக்க வேண்டும் - டி.ஐ.ஜி. ஆனி விஜயா

Published On 2022-03-14 14:44 IST   |   Update On 2022-03-14 14:44:00 IST
பெண்கள் தங்கள் உடலை பேணி பாதுகாக்க வேண்டுமென டி.ஐ.ஜி. ஆனி விஜயா பேசினார்.
வேலூர்:

வேலூர் கோட்டையில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 277 பெண் போலீசாருக்கு பயிற்சி இன்று தொடங்கியது. வேலூர் சரக டிஐஜி ஆனி விஜயா கலந்து கொண்டு பயிற்சியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:- 

பெண்கள் தங்களது உடலை பேணி பாதுகாக்க வேண்டும். குடும்பப் பெண்கள் ஆரோக்கியமாக இருந்தால் தான் அனைவரையும் கவனிக்க முடியும். சமுதாயத்தில் பெண்கள் முக்கியமானவர்கள்.

தற்போது பயிற்சி பெற உள்ள நீங்கள் அனைத்து பயிற்சிகளையும் நன்றாக கற்றுக் கொள்ள வேண்டும். இதுதான் உங்களுக்கு கடைசி வரை கை கொடுக்கும். இவ்வாறு அவர் பேசினார். 

நிகழ்ச்சியில் ஆயுதப்படை டிஎஸ்பி ரவிச்சந்திரன் பயிற்சி பள்ளி முதல்வர் அசோக் குமார் கவாத்து பயிற்சியாளர் பாலாஜி சட்ட பயிற்சியாளர் கனிமொழி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News